பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவர் போட்டி இன்றி தேர்வு
திருச்சி மாவட்டம் திருச்சி, லால்குடி, முசிறி, திருவரங்கம் ஆகிய கோட்டங்களையும், திருச்சி ஒரு மாநகராட்சியையும், மணப்பாறை, துறையூர், துவாக்குடி, லால்குடி, முசிறி ஆகிய நகராட்சிகளையும், கூத்தப்பர், காட்டுப்புத்தூர், பாலகிருஷ்ணம்பட்டி, பூவாளுர், மேட்டுப்பாளையம் (திருச்சி), எஸ்.கண்ணணூர், புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூர், பொன்னம்பட்டி, தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, உப்பிலியாபுரம், சிறுகமணி ஆகிய பேரூராட்சிகளுக்கும் தலைவர்
பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்கள் அந்தந்த நகராட்சி, பேரூராட்சிகளில் பதவியேற்று வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் பொன்னம்பட்டி பேரூராட்சியில் பேரூராட்சி தலைவராக திமுக வேட்பாளர் சரண்யா நாகராஜன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து அவர் பதவியேற்றுக்கொண்டார். பின்னர் அவருக்கு கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.