இரும்பு திருடியவரை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்!

0 461
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டை ஊராட்சியை சேர்ந்தவர் அருளானந்தம். இவரது மகன் சகாயராஜ்(வயது 47). இவர் பத்தாளப்பேட்டை அருகே உள்ள புத்தாம்பூரில் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் அந்த தொழிற்சாலையில் கடந்த 2 ஆண்டு காலமாக அடிக்கடி இரும்பு பொருட்கள் மற்றும் கேபிள் வயர்கள் திருடு போவதாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்து வந்திருந்தார்.

மேலும் இதனை அடுத்து நேற்று முந்தினம் சகாயராஜ் மற்றும் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஊழியர்கள் இரவு பணி முடித்துவிட்டு இருந்த நிலையில் நேற்றிரவு 12 மணிக்கு மேல் மர்ம நபர் ஒருவர் தொழிற்சாலைக்குள் புகுந்து இரும்பு கம்பிகள் மற்றும் இரும்பு பிளேட்டுகளை திருடி கொண்டு தப்ப முயன்றபோது, பத்தாளப்பேட்டை ஊர் பொதுமக்கள் உதவியுடன் சகாயராஜ் அவரை விரட்டி பிடித்து பொதுமக்கள் தங்களுக்கே உரிய பாணியில் விசாரித்தபோது

அந்த திருடன் காட்டூர் ரயில் நகரை சேர்ந்த சேட்டு(வயது 50) என்பது தெரியவந்தது. மேலும் இப்பிரட்சனை சம்மந்தமாக திருவெறும்பூர் காவல் நிலைத்தில் தகவல் கிடைத்ததும். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சென்ற திருவெறும்பூர் போலீசார் இரும்பு திருடனை பொதுமக்களிடமிருந்து மீட்ட போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.