திருச்சியில் ஒரே நாளில் 1,742 கிலோ கலப்பட தேயிலை தூள் பறிமுதல்!

0 489
Stalin trichy visit

திருச்சி அரியமங்கலம் திருமகள் தெருவில் செல்வின் என்பவருடைய வீட்டை திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையிலான உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது சுமார் 1,000 கிலோ கலப்பட தேயிலை தூள் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மூன்று சட்டப்பூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு அதனை பகுப்பாய்வு செய்வதற்காக அனுப்பி

வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருச்சி தாத்தையங்கார் பேட்டையில் உள்ள 5 தேயிலைத்தூள் விற்பனையாளர்கள் கடை மற்றும் வீட்டை ஆய்வு செய்தபோது சுமார் 742 கிலோ கலப்பட தேயிலை தூள் கண்டறியப்பட்டு அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் இன்று மட்டும் 1,742 கிலோ கலப்பட தேயிலை தூள் பறிமுதல் செய்யப்பட்டு மொத்தம் ஆறு சட்டபூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.