திருச்சி மாநகராட்சி தேர்தலில் 33-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு முதல் முறையாக கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜி.திவ்யா தனக்கோடி (வயது 28) திருச்சி மாநகராட்சியின் துணை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் மேயர் அன்பழகன், கவுன்சிலர்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு
பதவியேற்றார். இவருடைய தந்தை கோவிந்தராஜ், தாய் தனலட்சுமி. திவ்யா பாலக்கரை கீழபடையாச்சிதெருவில் வசித்து வருகிறார். தற்போது தொலைதூரக் கல்வியில் பி.காம். பட்டப்படிப்பை படித்து வருகிறார். இவருடைய கணவர் தனஸ் என்கிற தனக்கோடி(வயது 36). இவர் சொந்தமாக பேக்கரி கடை நடத்தி வருகிறார். தி.மு.க.வில் வார்டு பிரதிநிதியாக உள்ளார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தையும், 7 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.