திருச்சி தில்லைநகர் 8வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஹைதர்அலி(வயது 42). தொழில திபர். இதில் நேற்று முன்தினம் இரவு ஹைதர்அலியின் 17 வயது மகன் மற்றும் உறவினரின் மகன் என 2 பேரும் காரில் வெளியே சென்றனர். தொடர்ந்து வீடு திரும்பும் போது, பறவைகள் சாலையில் காரை வழிமறித்த மர்ம ஆசாமிகள் 2 பேர் ஹைதர் அலியின் உறவினர் மகனை காரில் இருந்து வெளியேற்றிவிட்டு காரில் இருந்த ஹைதர்அ லியின் மகனுடன் காரை எடுத்து
சென்றனர். இதில் காரில் இருந்து இறக்கப்பட்ட வாலிபர். மர்ம ஆசாமிகள் 2 பேர் காருடன் மகனை கடத்தி செல்வதாக ஹைதர் அலியிடம் செல்போனில் தகவல் அளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹைதர் அலி கன்டோன் மென்ட் போலீசில் புகார் அளித்தார். புகாரை அடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், காரின் எண்ணை கொண்டு கண் காணித்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசாரின் விசாரணையில்,
ஹைதர் அலி, தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.6 லட்சம் கடன் பெற்றார். இதில் கடன் தொகையில் ரூ.3 லட்சம் செலுத்திய நிலையில் மீதமுள்ள ரூ.3 லட்சம் தொகையை செலுத்தவில்லை. இதையடுத்து நிதிநிறுவனம் சார்பில் பலமுறை பணம் செலுத்தகேட்டும், செலுத்துவதாக கூறிய ஹைதர் அலி, காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதையடுத்து
பணத்திற்கு பதிலாக காரை எடுத்து செல்வதற்காக ஊழியர்கள் 2 பேர் வந்து காரை எடுத்து சென்றபோது, காரில் இருந்த ஹைதர்அலியின் மகனையும் சேர்த்து அழைத்து சென்றது தெரியவந்தது. தொடர்ந்து இருதரப்பினரையும் வரவழைத்த கன்டோன்மென்ட் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கன்டோன்மென்ட் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.