ஆற்றில் அடித்துசெல்லப்பட்டவரை தேடும் பணி தீவிரம்!
திருச்சி கே.கே.நகர் அய்யர்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ். ரியல்எஸ்டேட் தொழில் செய்து வரும் இவரது மகன் பாலஅபினயன்(வயது 21). இவர் திருச்சி விமான நிலையத்தில் பராமரிப்பு வேலை செய்து வருகிறார். பால அபினயன் தனது நண்பர்களான கே.கே.நகரை சேர்ந்த தர்ஷன்(21),
எடமலைப்பட்டி புதுாரை சேர்ந்த கிஷோர் குமார்(21) ஆகியோருடன் சேர்ந்த திருச்சி கம்பரசம் பேட்டையில் உள்ள காவிரி ஆற்றின் தடுப்பணைக்கு சென்றார். அங்கு காவிரி ஆற்றில் அவர்கள் மூவரும் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற பால அபினயன் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். இதைப்பார்த்த நண்பர்கள் இருவரும் கூச்சலிட்டனர். உடனே கரையில் இருந்த சிலர் அவரை
காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதுகுறித்து திருச்சி கன்டோன்மென்ட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பால அபினயனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணியில் நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் இன்று காலை முதல் பாலஅபினயனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.