“போலீஸ்” எனக்கூறி மூதாட்டியிடம் 3½ பவுன் நகை பறிப்பு!

0 264
Stalin trichy visit

திருச்சி, கிராப்பட்டி, பாரதி நகரைச் சேர்ந்தவர் ராமையா மனைவி முனியம்மாள்(வயது 70). இவர் முதியோர் உதவித்தொகை வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் முனியம்மாவிடம் நீங்கள் நகை அணிந்து கொண்டு இப்படி செல்வது தவறு. யாராவது பார்த்து விடுவார்கள் நாங்கள் இருவரும் போலீஸ்காரர்கள் எனக்கூறி

மூதாட்டியிடம் அந்த நகையை வாங்கி ஒரு பையில் வைத்து விட்டு வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். வீட்டுக்கு வந்து முனியம்மாள் பையை பார்த்த போது பையில் களிமண் இருந்ததும் நகை இல்லாததை கண்டும் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் ஏமாற்றி 3½ பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/IFC5JrQzHnf9WurwIfJTIH

Leave A Reply

Your email address will not be published.