திருச்சி தென்னூர் மின் செயற்பொறியாளர் பிரகாசம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;- திருச்சி நகரியம் கோட்டம் பகுதியில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதையொட்டி மலைக்கோட்டை பிரிவிற்குட்பட்டபர்மா பஜார், என்.எஸ்.பி.ரோடு, தெப்பக்குளம், சூப்பர் பஜார், சிங்காரத்தோப்பு, மற்றும் ரெட்டைமால் தெரு ஆகிய பகுதிகளில் காலை 6 மணி முதல்
11 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. மேலும் தென்னூர் பிரிவிற்குட்பட்ட தென்னூர் ஹைரோடு, ஸ்டேட் பேங்க் முதல் புத்தூர் நால்ரோடு வரை மற்றும் வி.என்.பி. தெரு ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.