போக்சோ சட்டத்தில் கைதானவர் சாவு

0 370
Stalin trichy visit

போக்சோ சட்டத்தில் கைதான திருச்சி மத்திய சிறை கைதி பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நாகுடி மாவு நல்லூர் பகுதியை சேர்ந்தவர் முத்து பிள்ளை. இவரது மகன் சரவணன் (வயது 38). இவர் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது இரண்டு வழக்குகள் ஏற்கனவே ‘

உள்ளன. மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சரவணனுக்கு எச்.ஐ.வி. தொற்று மற்றும் காய்ச்சல், டயாரியா இருந்துள்ளது. உடனே அவரை சிறை அதிகாரிகள் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சரவணன் சிகிச்சை பலனின்றி

பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்சி மத்திய சிறை அதிகாரி சண்முகசுந்தரம் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்ஜோதி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Leave A Reply

Your email address will not be published.