ராம்ஜிநகரில் கஞ்சா விற்றவர் கைது

0 267
Stalin trichy visit

திருச்சி ராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வன்னாங்கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்து வந்த ஜானகி ராமன் (வயது 44) என்கிற
நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 350 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி நகர்ப்புற பகுதிகளுக்கு மிக அருகாமையில்

இருக்கும் ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்பனையை தடுப்பதற்கு தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும் கஞ்சா விற்பனை செய்யும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.