சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 13ந் தேதி பூச்சொரிதல் விழா

0 348
Stalin trichy visit

சக்திஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூச்சொரிதல் விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தஆண்டு பூச்சொரிதல் விழா வரும் 13ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்குகிறது. அன்று அதிகாலை விக்னேஷ்வர பூஜை,

புண்யாகவாசனம், அனுக்ஞை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் முடிந்து காலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் மீனலக்கனத்தில் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் பூச்சொரிதல் விழா தொடங்குகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.