திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள ஒக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்(வயது 58), விவசாயி. இவர் தனது மனைவி ராணி மற்றும் தாய் அங்கம்மாள் ஆகியோருடன் ஒக்கரையில் வசித்து வருகிறார். இவரது மகள் வெளியூரில் பணியாற்றி வருகிறார். மகன் சென்னையில் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உணவருந்தி விட்டு ராஜ் தன் குடும்பத்தினருடன் அருகில் உள்ள தனக்குச் சொந்தமான மச்சு வீட்டில் இரவு தூங்கச் சென்று விட்டனர். காலை எழுந்து வந்து பார்த்தபோது ஓட்டு
வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது மறைவான இடத்தில் வைக்கப்பட்டு இருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் இருந்த நெக்லஸ் மூன்றரை பவுன், ஆரம் ஐந்தரை பவுன், செயின் 3 பவுன் மற்றும் மோதிரம், தோடு உள்பட 15 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜ் அளித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.