கோவில் திருவிழாவையொட்டி கூடுதல் விலைக்கு மது விற்பனை-புகார்!

0 256
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாசிமாதத்தையொட்டி கோயில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில தினங்களாக, திருச்சி மாநகரில் புத்தூர் குழுமாயி கோயில் திருவிழாவும், ஊரகப் பகுதியில் மணப்பாறை அருகேயுள்ள வீரப்பூரில், கன்னிமாரம்மன் வகையறா கோயில்களில் பிரம்மோர்சவ விழாவும் நடைபெற்று வருகின்றன. இவ்விழாக்களை ஒட்டி, குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் இயங்கி வரும் டாஸ்மாக் அரசு மதுபானக் கடைகளில், நிர்ணயிக்கப்பட்ட கூடுதல் விலைகளுக்கும்

மேல் மேலும் அதிகமான கூடுதல் விலைகளுக்கு மது வகைகளை விற்பனை செய்வதாகவும், இரவு நேரங்களில் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைகளுக்கு மது விற்பனை நடைபெறுவதாகவும் கடந்த இரு தினங்களாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக வீரப்பூர் பகுதியில், கூடுதலாக 4 கடைகள் (ஒரே கடை எண்ணில் 4 ஸ்டால்கள்) அமைக்கப்பட்டு விற்பனை செய்ய, தமிழ்நாடு மாநில வாணிபக்கழக திருச்சி மாவட்டம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கென பிரத்யேகமாக

பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது ஏற்கெனவே டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் நபர்களில் 28 பேரை இக்கடைகளுக்கு சிறப்பு பணியாளர்களாக தாற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு துறை ரீதியாக பல்வேறு நடைமுறைகள் மற்றும் ஆலோசனைகளும் அறிவுறுத்தப்பட்டு, அவர்களை கண்காணிக்க மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தலைமையில்

மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் மதுபானங்களுக்கு அரசு ரூ.20 முதல் 80 வரையில் விலைகளை அதிகரித்துள்ள நிலையில், மேலும் புகார்கள் ஏதும் நடைபெறா வண்ணம் விற்பனை மேற்கொள்ளவும், புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நிபந்தனையோடும் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஆனால் அந்த நிபந்தனைகளை கருத்தில் கொள்ளாமல் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள (ரூ.40 முதல் 80 வரை) கூடுதல் விலைகளுக்கும் மேலாக,

மேலும் கூடுதல் விலைகளுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து, திருச்சி மண்டல மேலாளரிடம் (எஸ்.ஆர்.எம்.) கேட்டபோது, அவர் மாவட்ட மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். கோயில் திருவிழாவின்போது, கூடுதல் விலைக்கும் மேல் அதிக விலைகளுக்கு மது விற்பனை நடப்பது குறித்து, மதுப்பிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.