லால்குடி சப்தரீஸ்வரர் கோவிலில் தேர்க்கால் நடும் விழா!
திருச்சி மாவட்டம், லால்குடியில் அமைந்துள்ளது பெரியநாயகி உடனுறை சப்தரீஸ்வரர் திருக்கோயில். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டுக்கான பங்குனி தேரோட்ட விழா தொடங்கியது. முதலாவதாக தேர்க்கால் நடும் விழா நடைப்பெற்றது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி புறப்பாடு பல்லக்கு,

பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும். முக்கிய நிகழ்வான தேரோட்ட விழா வருகிற 17ந் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில் லால்குடி திமுக நகர்மன்றத் தலைவர் துரை மாணிக்கம், திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, லால்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன், கோயில் செயல் அலுவலர் ஜெய்கிஷோர் மற்றும் கோயில் அலுவலக பணியாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.