மலிவுவிலை மருந்தகம் குறித்து விழிப்புணர்வு பேரணி!

0 415
Stalin trichy visit

பொதுமக்கள் உடல்நிலை பாதிக்கப்படும்பொழுது மருத்துவமனைகளில் அதற்காக ஆகும் செலவைவிட மருந்து வாங்க ஆகும் செலவு அதிகமாக இருப்பதால் ஏழை எளிய பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனை குறைக்க மத்திய அரசு நாடு முழுவதும் மக்கள் மருந்தகம் என்ற பெயரில் குறைந்த விலையில் மருந்து மாத்திரைகளை விற்பனை செய்து வருகிறது. இது பற்றி பொதுமக்களிடம்

விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பேரணிகள் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை பாஜக மாவட்டத் தலைவர் ராஜசேகர் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். மாவட்ட துணைத்தலைவர்

இந்திரன், திருவெறும்பூர் வடக்கு மண்டல தலைவர், இந்த பேரணி காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவ, மாணவிகள் மக்கள் மருந்தகம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை ஏந்தி கல்லூரியிலிருந்து காட்டூர் கடைவீதியில் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஆயில் மில் வரை சென்று கல்லூரியை மீண்டும் வந்து அடைந்தனர். இதில் மாவட்ட செயலாளர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.