வேலைகிடைக்காத விரக்தியில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

0 271
Stalin trichy visit

திருச்சி கோட்டை கீழப்புலிவார்டு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 30). இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கூலித் தொழிலாளியான இவர், கடந்த சில மாதங்களாக வேலை இல்லாமல் விரக்தியில் இருந்து வந்தார். இந்நிலையில் மனைவி ரேஷன் கடைக்குச் சென்றிருந்த நேரத்தில் தனிமையில் இருந்த மாரிமுத்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து

கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.