தற்கொலைக்கு முயன்ற பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை!

0 496
Stalin trichy visit

அரியலூர் மாவட்டத்தில் உள்ள டவுன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் லெட்சுமிபிரியா(வயது 28). இவர் பணியில் இருந்தபோது, திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு அரியலூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக‘

அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பணி அழுத்தம் காரணமாக அவர் தற்கொலைக்கு

முயன்றாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அரியலூர் பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.