மாணவர்களுக்கான தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டி; 15ம் தேதி கடைசி நாள்!

0 367
Stalin trichy visit

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
இந்திய தேர்தல் ஆணையமானது ஒவ்வொறு வாக்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக 2022 -ம் ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு “என் வாக்கு எனது எதிர்காலம் – ஒரு வாக்கின் வலிமை” என்ற கருப்பொருளை மையமாக கொண்டு தேசிய அளவில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் -2022 அனைத்து தரப்பு மக்களும் மற்றும் அனைத்து வயதினரும் பங்கு பெறும் வகையில் https://voterawarenesscontest.in/ என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில்

நடத்த உள்ளது. மேற்படி போட்டிகள் வினாடி வினாப் போட்டி, வாசகம் எழுதும் போட்டி, பாட்டுப் போட்டி, காணொலிக் காட்சி தயாரிக்கும் போட்டி, விளம்பரப் படவடிவமைப்புப் போட்டி ஆகியவற்றில் நிறுவனம் சார்ந்த நபர்கள் (Institutional ) வகையின் கீழ் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் போன்ற கல்வியியல் நிறுவனங்களும், தொழில் சார்ந்த நபர்கள் (Professional)வகையின் கீழ் பாட்டு பாடுபவர், காணொலிக்காட்சி உருவாக்குபவர், விளம்பரப்படம் தயாரிப்பவர்களும், தொழில்சாராதவர் (Amatetur ) வகையின் கீழ் பொதுமக்களும் பங்குபெறலாம். இப்போட்டிகளில்

பங்கேற்பதற்கான வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை https://ecisveep.nic.in/contest// என்ற இணைய தளத்தில் பார்வையிடலாம். போட்டிகளில் பங்குபெற விரும்புவர்கள் போட்டிகள் தொடர்பான பதிவுகள் மற்றும் பங்கேற்பவர்களின் விபரங்களுடன் voter-contest@eci.gov.in என்ற மின்னஞ்கல் முகவரிக்கு வரும் 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இந்த போட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெறும் நபர்களுக்கு ரூ.3,000 முதல் ரூ.2 லட்சம் வரை பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.