ஆம்புலன்ஸ் மோதி பெண் காயம்!

0 252
Stalin trichy visit

திருச்சி உய்யக்கொண்டான் திருமலை ஸ்ரீரங்கா அவென்யூ பகுதியை சேர்ந்தவர் கங்காதரன். இவர் தனது மனைவி வித்யா மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் தில்லைநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த ஆம்புலன்ஸ் இவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில்

கீழே விழுந்த வித்யாவிற்கு தலையில் காயம் ஏற்பட்டது. கணவர் அவரை மீட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.