லால்குடி நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து!

0 329
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை பூவாளூர் சாலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ள குப்பை கிடங்கில் குப்பைகளை சேமித்து வருகின்றனர். இந்நிலையில் மர்மநபர்கள் யாரோ குப்பைகளுக்கு தீ வைத்துச் சென்றனர். தீ மளமளவென பரவியது. இதுகுறித்து தகவலறிந்த லால்குடி நகராட்சி நிர்வாக அலுவலர்கள் லால்குடி தீயணைப்பு நிலையத்திற்கு

தகவல் கொடுத்தனர். தகவலறிந்த லால்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நிலைய அலுவலர் போக்குவரத்து சுரேஷ், சிறப்பு நிலைய அலுவலர்கள் பாரதி மற்றும் செந்தில்குமார், வீரர்கள் சுரேஷ், விஜய் அமிர்தராஜ், சாகுல் ஹமீது, பூமிநாதன், அசோக் உள்ளிட்டோர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.