தொடங்கியது மணப்பாறையில் குதிரை சந்தை – குதிரைகளைப் பார்க்க பொதுமக்கள் ஆர்வம்!

0 608
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் புகழ்பெற்ற மாட்டுச்சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வருவார்கள். செவ்வாய்கிழமை மாலை தொடங்கி புதன்கிழமை மதியம் வரை நடைபெறும் சந்தையில் சுமார் 5 முதல் 8 கோடி ரூபாய் வரை மாடுகள் விற்பனை நடைபெறும். இந்நிலையில் இன்று முதல் மாட்டுச்சந்தையின் ஒரு பகுதியில் குதிரை சந்தையும் தொடங்கப்பட்டுள்ளது. திடீர் ஏற்பாட்டில் தொடங்கப்பட்ட இந்த குதிரை சந்தையில் கத்தியவார், மார்வார் ரகம், கலப்பினம், நாட்டுக்குதிரை, பந்தய குதிரைகள் என பல்வேறு வகையாக குதிரைகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விற்பனைக்கு வந்திருந்தது. சுமார் 10 ஆயிரம் தொடங்கி 2 லட்சம் வரை மதிப்பிலான குதிரைகள் இதில் இடம் பெற்றிருந்தது. இதுமட்டுமின்றி குதிரை வண்டிகளும் விற்பனைக்கு இருந்தது. இதே போல் சந்தையில் குதிரையில் ஏறி வலம் வந்துடன், குதிரை நடனத்தையும் செய்து காண்பித்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகளையும் குதிரை வளர்ப்போர் உற்சாகப்படுத்தினர். அனைவரையும் கவர்ந்தது. சந்தைக்கு வந்த பலரும் ஆர்வத்;துடன் குதிரைகளுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

அந்தியூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில்தான் குதிரை சந்தை நடைபெற்று வந்த நிலையில் தற்போது மணப்பாறையில் மாட்டுசந்தையுடன் சேர்த்து குதிரை சந்தையையும் தொடங்கியுள்ளோம். குதிரை உபயோகத்தை அதிகப்படுத்துவதன் மூலம் குதிரை வளர்ப்பையும் அதிகப்படுத்தமுடியும், இதனால் அழிந்து வரும் குதிரை இனத்தை காப்பாற்றமுடியும் என்ற நோக்கில் விழிப்புணர்வு ஏற்படுத்த நாட்டுக்குதிரைகளைக் காப்போம் என்ற குழு மூலமாக இந்த முயற்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என குதிரை வளர்ப்பு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மாட்டு சந்தையைப்போல் மணப்பாறை குதிரைச் சந்தையையும் மக்களிடையே கொண்டு சேர்த்து பிரபலப்படுத்தி புகழ்பெறச் செய்வோம் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.

இன்று தொடங்கப்பட்ட சந்தைக்கு 25 குதிரைகள் மட்டுமே வந்திருந்தன. குதிரைகளைக்காண வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலரும் ஆர்வத்துடன் பார்த்துச் விலைகுறித்து கேட்டறிந்தனர். முதல் நாளிலேயே பலரும் ஆர்வம் காட்டியதால் வரும்வாரங்களில் குதிரைகளுக்கு வரவேற்பு அதிகரிப்பதுடன் வியாபாரமும் சூடுபிடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.