இளம்பெண்ணை கிண்டல் செய்து, தாக்கியதாக 4 பேர் மீது வழக்கு!

0 330
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள மேட்டுத்தெருவில் வசித்து வருபவர் ஆனந்தராஜ். இவரது மகள் நித்தியா(வயது 20). இவர் சம்பவத்தன்று வீட்டுக்கு அருகில் உள்ள பெட்டி கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கே கடைக்கு அருகில் அமர்ந்து இருந்த அதே தெருவை சேர்ந்த சங்கர் (வயது 22), காமராஜ் (வயது 21), தனபால் (வயது 23),

விக்னேஷ் (வயது 20) ஆகிய 4 பேரும் நித்யாவை கிண்டல் செய்து உள்ளார்கள். அப்போது அதற்கு நித்தியா எதற்காக கிண்டல் செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு சங்கர் மற்றும் அவருடன் இருந்த 3 மூன்று பேரும் நித்தியாவை தலை முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி உள்ளார்கள். இதில்

நித்தியாவிற்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து நித்தியாவின் அண்ணன் அஜித்குமார் ஏதற்காக எனது தங்கையை தாக்குநீர்கள் என்று கேட்டதற்கு நான்கு பேரும் அஜீத்குமாரை கல்லால் அடித்து உள்ளார்கள். இதில் அஜித்குமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து நித்தியா மற்றும் அஜித்குமார் துறையூரில் உள்ள

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதை அடுத்து சங்கர், விக்னேஷ், தனபால், காமராஜ் ஆகிய 4 பேரும் தலைமறைவு ஆனார்கள். நித்யா கொடுத்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.