மதுபோதையில் டிரைவரை தாக்கியவருக்கு சிறை!

0 307
Stalin trichy visit

திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 27), டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த திண்டுக்கல் பழனி ரோட்டை சேர்ந்த ராஜி என்கிற ராஜபாண்டி(வயது 24) என்பவர் மதுபோதையில்

ரவிச்சந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த ரவிச்சந்திரன் இதுகுறித்து அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ராஜபாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.