திருச்சி மாவட்டம் வளநாட்டை அடுத்த தேனூர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 38). இவர் குடும்பத்துடன் வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை
பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்திரசேகர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த இரன்டு சவரன் நகை மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த வளநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும்இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.