அவதூறு ஆடியோ பதிவை சமூகவலை தளங்களில் வெளியிடப்போவதாக இளம்பெண்ணுக்கு மிரட்டல்!

0 240
Stalin trichy visit

திருச்சி உறையூர் அனுகிரகா அபர்ட்மெண்ட் பகுதியை சேர்ந்தவர் ரேஷ்மா அசின் (வயது 28). இவரின் 18 வயது மருமகள் திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் யாகூப் அபிப் பகுதியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து ரேஷ்மா அசின், மருமகளின் ஆடியோ பதிவை தவறாக சித்தரித்து அவரின் உறவினர்களுக்கு அனுப்பி, சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி பாதிக்கப்பட்ட இளம்பெண் கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அருள்ஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.