திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்ற நடுவரை பணியிடை நீக்கம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!

0 419
Stalin trichy visit

திருச்சி மாவட்ட நீதிமன்ற நுழைவுவாயில் முன்பு இன்று காலை வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு த.பானுமதி, ஜோ.கென்னடி ஆகியோர் தலைமை தாங்கினர்.

திருச்சி மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நடுவர் R.மணிவாசகனால் இழைக்கப்படும் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் வன்முறை நடவடிக்கைகள் மற்றும் சட்டத்திற்கு எதிரான போக்குகள் ஆகியவற்றை கண்டித்தும், உடனடியாக அவரை பணியிடை நீக்கம் செய்து விசாரணை நடத்தக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நீதிமன்ற நடுவர் மணிவாசகனத்திற்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.