சிறுமியிடம் சில்மிஷம் இட்லி கடைக்காரருக்கு போலீஸ் ட்ரீட்மெண்ட்!
திருச்சி பாலக்கரை காஜாபேட்டை பசுமடத்தை சேர்ந்தவர் ஜோசப்(வயது 52). இவரது மனைவி தமிழ்செல்வி. இருவரும் வீட்டில் சிறிய அளவில் டிபன் கடை நடத்தி வருகின்றனர். சில நாட்களாக இட்லி வாங்க வந்த 5ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் ஜோசப் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் கோட்டை அனைத்து மகளிர் போலீசார் ஜோசப் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.