மருத்துவ காப்பீட்டுத்தொகையை திரும்ப பெறும் வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அருள்ஜோஸ் தலைமை வகித்தார். ஜெகநாதன், மணி, தங்கவேல், சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு சலுகைகள் மறுக்கப்பட்டு வருகிறது.
இதனால் எங்களின் இயக்கம் சார்பாக கோரிக்கை ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறோம். தற்போது புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் மருத்துவ செலவு திரும்ப பெறுதல் வசதிகளை தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி மறுத்து வருகிறது மற்றும் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும், மருத்துவ காப்பீட்டுத் தொகையை திரும்ப பெறும் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.