கடன் தொல்லையால் துப்புரவு ஊழியர் தற்கொலை!

0 263
Stalin trichy visit

திருச்சி இபி ரோடு சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் அய்யப்பன்(வயது 45). அரியமங்கலம் கோட்டத்தில் மாநகராட்சி துப்புரவு பணியாளராக 20 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். இவர் அளவுக்கு மீறி கடன் வாங்கியிருந்தார். கடன் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால்

கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்து வந்தனர். இதனால் மனமுடைந்த அய்யப்பன், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.