போலீஸ் வாகனங்கள் பொது ஏலம்!

0 371
Stalin trichy visit

சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் பயன்படுத்தி கழிவு செய்யப்பட்ட 9 ஜீப்கள், ஒரு டெம்போ டிராவலர் வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளன. இந்த வாகனங்கள் நெல்லை, கோவை, திருச்சி, மதுரை மற்றும் சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகங்களில் உள்ளன. அவை உள்ள நிலையிலேயே பொது ஏலம்

விடப்பட உள்ளன. ஏலதாரர்கள் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று வாகனங்களை பார்வையிடலாம். ஏலதாரர்கள் முன்பணம் ரூ.2 ஆயிரம் செலுத்தி பதிவு செய்து கொண்டு ஏலத்தில் கலந்து கொள்ளலாம். முன்பண தொகை ரசீது யார் பெயரில் பெறப்படுகிறதோ அவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள முடியும். மேலும் விபரங்களுக்கு சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் 9384847273 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Leave A Reply

Your email address will not be published.