திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் உள்ள திருமண மண்டபம் அருகே சுமார் 60 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக திம்ம ராயசமுத்திரம் விஏஓ குமார், ஸ்ரீரங்கம் போலீசில் புகார்
அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.