பெண்களின் அன்றாட பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்!
காவல்துறையில் பணிபுரியும் பெண்களுக்கான பொது மற்றும் பணிபுரியும் இடங்களில் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமை வகித்து பேசுகையில், சமூகத்தில் ஆண்களுக்கு இணையாக பணியாற்றும் பெண்களுக்கு வாழ்த்துகள். நாட்டிலேயே தமிழக காவல்துறையில் பெண்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக
தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பெண்கள் சிறப்பாக பணியாற்றி இந்தியாவிலேயே தமிழக காவல்துறை முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. காவல்துறையில் பணிபுரியும் பெண்கள் அனைவரும், பெண்கள் பாதுகாப்பு குறித்து முழுமையாக தெரிந்து கொண்டு, வேறு பணி களில் உள்ள தங்கள்
உறவினர்கள் மற்றும் தெரிந்த நபர்களுக்கு பாதுகாப்பு குறித்து தெரிவிக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய அரசு நிறுவனங்கள் மூலமாகவும், இலவச உதவி எண்கள்: 1091 மற்றும் 181 மூலமாகவும் அன்றாட பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றார்.