சூடுபிடிக்கும் ராமஜெயம் கொலை வழக்கு; தகவல் தெரிவித்தால் சன்மானம்!

0 570
Stalin trichy visit

திருச்சியில் 2012ம் ஆண்டு மார்ச் 29ல் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணைக்காக ஐகோர்ட் சிறப்பு புலனாய்வு பிரிவை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.பி.ஜெயக்குமார், டிஎஸ்பி மதன், சிபிஐ டிஎஸ்பி ரவி ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் மேலும் ஒரு டிஎஸ்பி, 5 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 45 பேர் இந்த சிறப்பு

புலனாய்வு பிரிவில் இணைய உள்ளனர். ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையில் விபரங்கள் ஏதேனும் தெரிந்தால் பொதுமக்கள் எஸ்.பி. ஜெயகுமாரை 90806 16241, டிஎஸ்பி மதனை 94981 20467, 70940 12599 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் rmathan1970@gmail.com என்ற

இமெயில் மூலமும் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.