கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயிலில் நாளை மகா சுதர்சன ஹோமம்!

0 312
Stalin trichy visit

உலக நன்மைக்காக திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மகா சுதர்சன ஹோமம் நடக்கிறது. இக்கோயிலில் சக்கரத்தாழ்வாருக்கு தனிச்சன்னதி உள்ளது. 16 கரங்களுடன், சிறந்த வரப்பிரசாதியாக விளங்கும் இவரை பிரார்த்தித்துக் கொண்டால் சிறந்த நற்பலன்கள் கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. இந்த சக்கரத்தாழ்வாருக்கு மாதந்தோறும், மகா சுதர்சனரின் ஜன்ம நட்சத்திர மான சித்திரை

நட்சத்திரத்தன்று மகா சுதர்சன ஹோமம் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வகையில் நாளை காலை 10 மணி முதல் 12 மணி வரை மகா சுதர்சன ஹோமம் நடக்கிறது. சுதர்சனருக்கு சிறப்பு திருமஞ்சனமும், அடுத்து அலங்காரத்துடன் மகா ஆரத்தியும் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து அன்னதானத்திற்கு ஏற்பாடு

செய்யப்பட்டுள்ளது. இந்த ஹோமத்தில் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேற கட்டணம் செலுத்தி பங்கேற்கலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.