குடிமகன்களின் பாராக மாறிவரும் செல்வநகர் 2, 3வது வீதி கார்னர்; சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி! “கண்டுகொள்ளுமா? காக்கி சட்டை”

0 589
Stalin trichy visit

திருச்சி மாநகர கமிஷனராக கார்த்திகேயன் பொறுப்பேற்றது முதல் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
மேலும் திருச்சி நகரப்பகுதிகளில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து செயல்பட்டு வருகிறார். இருப்பினும் ஒரு சில இடங்களில் குற்றச்செயல்கள் வழக்கம்போல் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றது. அந்த வகையில்,

திருச்சி செல்வநகர் 2வது வீதி மற்றும் மூன்றாவது வீதி சந்திப்பில் இரவு நேரத்தில் சிலர் சாலையோரத்தில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு அருகில் உள்ள பெட்டிக்கடையில் தின்பண்டங்களை வாங்கிக்கொண்டு ஒய்யாரமாக அமர்ந்து மது அருந்தி வருகின்றனர். இரவு, பகல் என இதே நிலை நீடிப்பதால் இந்த வழியாக பெண்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் செல்ல பெரிதும் இடையூறாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புகூட இப்பகுதியில் இரவு நேரத்தில் வட மாநில வாலிபர் ஒருவர் உள்ளாடை மட்டும் அணிந்த நிலையில் நின்று கொண்டு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளான். இதனை

பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அந்த வாலிபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுபோன்ற செயல்களைப் பார்த்து அப்பகுதி பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை வெளியே அனுப்ப பெரிதும் அச்சப்பட்டுள்ளன. இப்பகுதியில் வசிக்கும் சிறுவர்-சிறுமிகள் அப்பகுதியில் டியூசன் நடத்துபவர்களிடம் சென்று மாலை நேரத்தில் படித்து வருகின்றனர். டியூசன் முடிந்து அவர்கள் இரவு நேரத்தில் வீடு திரும்புவதற்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு

பிறகு பெற்றோர்கள் தங்களின் பெண் பிள்ளைகளை டியூசன் அனுப்பவே பெரிதும் அச்சப்பட்டு நிறுத்தி வருகின்றனர். தற்போது அவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்த காணப்படுவதால் செல்வ நகர் 2வது வீதி மற்றும் மூன்றாவது வீதி சந்திப்பில் சிலர் பெண்களை அழைத்து வந்து தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதே நிலை தொடர்ந்து நீடித்தால் செல்வ நகர் 2வது வீதி மற்றும் மூன்றாவது வீதி சந்திப்பு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களின் கூடாரமாக மாறி விட அதிக வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து அப்பகுதி பெண்களிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், இளைஞர்கள் முதல்

முதியவர்கள் வரை இரண்டாவது வீதி மற்றும் மூன்றாவது வீதி கார்னரில் அமைந்துள்ள ஒரு கடையின் அருகே அமர்ந்து கொண்டு மது அருந்துவதினால் பெண்கள் நடமாட முடியவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட செல்வநகர் விநாயகர் கோவில் அருகே மாலை நேரத்தில் நடந்து சென்ற ஒரு மூதாட்டியின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இந்த சம்பவத்திற்கு பிறகு இப்பகுதியில் அடிக்கடி போலீசார் ரோந்து வந்தனர். மேலும் நள்ளிரவில் கூட செல்வநகர் விநாயகர் கோவில்

முன்பு நின்றுகொண்டு அந்த வழியாக சென்றவர்களிடம் சோதனையிட்டு விசாரணை நடத்தி வந்தனர். அனால் தற்போது அவற்றை போலீசார் நிறுத்திவிட்டனர். எப்போதாவதுதான் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். இதனால் திருடர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் பயன்படுத்திக்கொள்கின்றனர். தாற்போது செல்வநகர் 2வது வீதி மற்றும் 3வது வீதி சந்திப்பு பகுதி குடிமகன்களின் பாராக மாறி வருகிறது. குறிப்பாக இவர்கள் இரவு 7 மணிக்கு மேல்

இரவு 11 மணிகுள் தான் ஒன்று கூடுகின்றனர். எனவே இப்பகுதியில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு கமிஷனர் கார்த்திகேயன் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். பெண்கள் சுதந்திரமாக இந்த பகுதியில் நடமாட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கிறார்களா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.