விவசாயிகளுக்கு அதிர்ச்சி; பிரதமரின் கிசான் திட்டத்தில் மாற்றம்!

0 436
Stalin trichy visit

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ், நிலம் உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 வீதம் ஆண்டிற்கு ரூ.6000 வேளாண் இடு பொருட்கள் வாங்கும் பொருட்டு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில், இத்திட்டத்தின் கீழ் 1,62,000 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்த தேதியினைப் பொறுத்துவிவசாயிகளுக்கு

10 தவணைகள் வரை அவரவர் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு தற்போது இத்திட்ட நிதி விடுவிப்பில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இதுவரை வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நிதி விடுவிப்பு செய்து வந்த நிலையில் இனி வருங்காலங்களில் இத்திட்ட நிதியானது ஆதார் எண் அடிப்படையில் விடுவிக்கப்படும். தற்போது விவசாயிகள் 11வது

தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்கோடு இணைப்பது அவ சியமாகும். எனவே, இதுவரை தங்களது வங்கிக் கணக்கை ஆதார் எண்ணோடு இணைக்காத விவசாயிகள் உடனடியாக தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும் என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.