கடைக்குள் புகுந்த சாரைபாம்பு; “அரை மணி நேர போராட்டம்”
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு 100 அடி சாலை பகுதியில் வசிப்பவர் ஜாகித். இவர் அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் மற்றும் ஹார்டுவேர்ஸ் கடை வைத்துள்ளார். இந்நிலையில் ஜாகித் வழக்கம் போல் கடையை திறந்துள்ளார். அப்போது கடைக்குள் 8 அடிநீளம் கொண்ட சாரை பாம்பு இருந்துள்ளது. இதனை
பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜாகித் உடனடியாக நவல்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் நவல்பட்டு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு சாரை பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.