இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நலத்திட்ட உதவிகள் வழங்க முடிவு!

0 369
Stalin trichy visit

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாலக்கரையில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் எம்.ஏ.எம்.நிஜாம் தலைமை வகித்தார். கூட்டத்தை யூத் லீக் திருச்சி தெற்கு மாவட்ட

பொருளாளர் சாதிக்குல் ஆமீன் கிராஅத் ஒதி தொடங்கி வைத்தார். தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் எம்.கே.எஸ். ஜமால் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாநில துணைச் செயலாளர் ஹாஜி வி.எம். பாரூக், தெற்கு மாவட்ட செயலாளர் கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான், மாநில எம்.எஸ்.எப். பொதுச்செயலாளர் அன்சர் அலி ஆகியோர் கட்சியை வளர்ச்சி பணிகள் குறித்தும், ரமலான் மாதத்தில் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் திருச்சி தெற்கு மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிப்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை குறித்து பேசினார்கள். திருச்சி

தெற்கு மாவட்ட துணைத் தலைவர் மவ்லவி எஸ்.ஏ.எச். உமர் பாரூக் மகழரி இனிய ரமலான் வருகை குறித்து ரமலான் மாதத்தில் செய்ய வேண்டிய கடமையை மற்றும் ரமலானில் எவ்வாறு எல்லாம் பணிகள் செய்ய வேண்டும் என்பதை குறித்து பல்வேறு ஆதராங்களுடன் பேசினார். இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் பல்வேறு வார்டுகளில் இருந்த இளைஞர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இணைந்து கொண்டார்கள். புதிதாக கட்சியில் இணைந்த 38 வார்டு பகுதியைச் சேர்ந்த ஜாக்கீஅ உசேன், ஷாகுல் ஹமீது, 49 வார்டுகளை சேர்ந்த உஸ்மான், முஸ்தபா, ஆதில் முஹம்மது, யஹியா, பீர் முஹம்மது, சதாம் உசேன், முஸ்தபா, செந்தணீர்புரம் முஹம்மது ஹபிபுல்லா, 50 வார்டு பகுதியைச்

சேர்ந்த கந்தர் பாஷா, வரகனேரி பகுதியைச் சேர்ந்த ஹஸன் அலி ஆகியோருக்கு பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் சால்வை அணிவித்து கட்சியில் இணைந்தமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான் தொடர்ந்து தெற்கு மாவட்ட செயலாளராக தொடர்ந்து பணியாற்றிட வேண்டும் என்று இந்த கூட்டத்தில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் தலைமைக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தை மாநில நிர்வாகிகள் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் வாயிலாக கேட்டு கொள்ளப்படுகிறது. மாவட்ட அலுவலகத்தில் ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை மக்ஃரிப் தொழுகைக்கு பிறகு தெற்கு மாவட்ட தலைவர், தெற்கு

மாவட்ட செயலாளர், தெற்கு மாவட்ட பொருளாளர், தெற்கு மாவட்ட நான்கு துணைத் தலைவர்கள், தெற்கு மாவட்ட நான்கு துணைச் செயலாளர்கள், யூத் லீக், எம்.எஸ்.எப்., எஸ்.டி.யூ., ஆகிய சார்ந்த நிர்வாகிகள் அனைவரும் வாரக் கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட சார்பில் நடத்தப்படும் பெண்கள் அரபி மதரஸாவிற்கு தனி கட்டிடமாக கட்டவும் முடிவு தீர்மானம் செய்யப்பட்டது. வாரந்திரக் கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளராக மாநில எம்.எஸ்.எப். பொதுச்செயலாளர் ஏ.எம்.எச். அன்சர் அலி செயல்படுவார் எனவும் முடிவு செய்யப்பட்டது.

திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உறுப்பினர் சேர்க்கை தொடர்பான பணிகளுக்காக தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் எம்.கே.எஸ். ஜமால் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என்றும், இந்த குழுவில் உறுப்பினர்களாக தெற்கு மாவட்ட பொருளாளர் பி.எம். ஹூமாயூன், தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் பீர் முஹம்மது, மாநில எம்.எஸ்.எப். பொதுச் செயலாளர் ஏ.எம்.எச்.

அன்சர் அலி, ஜாபர் அலி, யூத் லீக் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ஹாஜி ஜி.எஸ். ஹக்கீம், தெற்கு மாவட்ட துணைத் தலைவர் மவ்லவி அல்லாபக்ஷ், யூத் லீக் தெற்கு மாவட்ட பொருளாளர் சாதிக்குல் ஆமீன், வார்டு தலைவர் என்.கே. அமிருதீன், எஸ். ஷேக் முஹம்மது கவுஸ், நவாப் கான் ஆகியோர்கள் செயல்பாடுவார்கள் என்று தீர்மானிக்கப்படுகிறது. ரமலான் மாதத்தில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வார்டு நிர்வாகிகள் மாவட்டத்தின் அறிவுறுத்தலின் பேரில்

அந்தந்த பகுதிகளில் உள்ள ஜமாஅத் நிர்வாகிகளிடம் ஒருங்கிணைந்து இஃப்தார் நலத்திட்ட உதவிகள் செய்திட முடிவு செய்யப்பட்டது. தெற்கு மாவட்ட சார்பாக ரமலான் மாதத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்க முடிவு செய்யப்பட்டது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தை சார்ந்த அனைத்து நிர்வாகிகளும், வார்டு, தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், யூத் லீக, எம்.எஸ்.எப். தொழிலாளர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இறுதியில் ஜாபர்அலி நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.