ஒரே நாளில் ரூ.70 லட்சம் நிலுவை வாடகை வசூல்!

0 490
Stalin trichy visit

திருச்சி மலைக்கோட்டையில் தாயுமானவர் சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமாக உள்ள மலைவாசல் பகுதியில் 48 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. ஆனால் இந்த கடைகளை

வாடகைக்கு எடுத்தவர்கள் முறையாக வாடகை செலுத்தாமல் இருந்தனர். இதனால் இந்த கடைகளுக்கு 2016ம் ஆண்டு முதலே வாடகை பாக்கி நிலுவையில் இருந்து வந்தது. இதனால் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக தற்போதுவரை கோயிலுக்கு வர வேண்டிய வாடகை தொகை ரூ.5.57 கோடியாக இருந்தது. இது குறித்து அறநிலையத்துறை

சார்பில் கடைக் காரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டாலும், அவர்கள் வாடகை செலுத்தாமல் அலட்சியம் காட்டி வந்தனர். இதனால் வாடகை செலுத்தாத பாக்கி குறித்த அறிவிப்பு பலகைகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, சமூக வலை தளங்களில் வைரல் ஆனது. இந்நிலையில் மலைக்கோட்டை கோயில் நிர்வாகம் தொடர்ந்து வாடகை வசூலில் தீவிரம் காட்டி வருகிறது. ஒரே நாளில் மட்டும் ரூ.70 லட்சம் நிலுவை வாடகை வசூலிக்கப்பட்டு உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.