“திருச்சி மெயில் எதிரொலி” திருச்சி மாநகர காவல்துறைக்கு நன்றி தெரிவிக்கும் பெண்கள்!

0 412
Stalin trichy visit

திருச்சி மாநகர கமிஷனராக கார்த்திகேயன் பொறுப்பேற்றது முதல் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
மேலும் திருச்சி நகரப்பகுதிகளில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து செயல்பட்டு வரும் நிலையில் ஒரு சில இடங்களில் குற்றச்செயல்கள் வழக்கம்போல் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. அந்த வகையில்,

திருச்சி செல்வநகர் 2வது வீதி மற்றும் மூன்றாவது வீதி சந்திப்பு குடிமகன்களின் பாராக மாறி வருகிறது. இதனால் இந்த வழியாக பெண்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் செல்ல பெரிதும் இடையூறாக உள்ளது. எனவே இதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? என திருச்சி மெயில் இணையதள பதிப்பில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட பகுதியில் நேற்று இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனை அறிந்த அப்பகுதி பெண்கள் செய்தி வெளியிட்ட திருச்சி மெயில் இணைய பதிவிற்கும், திருச்சி மாநகர காவல் துறைக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.