குற்ற வழக்கில் காணாமல்போனவர் சடலமாக மீட்பு!

0 393
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் உள்ள பாதுகாக்கப்பட்ட காப்புக்காடு பகுதியில் ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக வையம்பட்டி காவல் துறையினருக்கு அப்பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற வையம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி

உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் சந்திரசேகர்(வயது 33). கொசூர்கிராமம் கரூர் மாவட்டம் என்பதும், இவர் டெய்லர் வேலை பார்ப்பதாகவும், சற்றுமன நிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் இவர் மீது தோகைமலை காவல் நிலையத்தில் ஒரு குற்ற வழக்கில் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.