ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி 75-ம் ஆண்டு பவள விழா; இனிக்கோ இருதயராஜ் எம்.எல்.ஏ. பங்கேற்பு!
திருச்சி ஆர்.சி.மேல்நிலைப்பள்ளியின் 75-ம் ஆண்டு பவள விழாவை முன்னிட்டு ஒற்றுமைக்கான நமது ஓட்டம் என்ற கருத்தில் அமைந்த மாரத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது. இதில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. இனிக்கோ இருதயராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பவள விழாவில் கலந்து கொண்டு மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி

பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்வில் முதன்மை கல்வி ஆய்வாளர் பாலமுரளி, மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன், ஆர்.சி.மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் சின்னப்பன், புனித ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் யூஜின், புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் கென்னடி, இளந்தளிர் கல்வி அறக்கட்டளையின் சூசை அலங்காரம், TMSSS இயக்குனர் ஜான் செல்வராஜ், ஆர்.சி.பள்ளியின் ஆசிரியப் பெருமக்கள், அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் திரளான வீரர்கள் கலந்து கொண்டனர்.