திருச்சி விமான நிலையத்தில் காசநோய் குறித்து விழிப்புணர்வு!
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு திருச்சி விமான நிலைய கான்பரன்ஸ் ஹாலில் காசநோய் குறித்த விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திருச்சி அரசு மருத்துவமனையின் துணை இயக்குநர் (காசநோய்)

டாக்டர் சாவித்திரி கலந்து கொண்டு, திருச்சி விமான நிலையத்தின் இந்திய விமான நிலைய ஆணைய ஊழியர்களுக்கு காசநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் விமான நிலைய ஊழியர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.