புதுமையான சாலைகள் வடிவமைப்பு திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு! “மேயர் அன்பழகன் வழங்கினார்”

0 320
Stalin trichy visit

சீர்மிகு நகரத்திட்டம் “Street 4 People” பொதுமக்களுக்கு உகந்த நடைபாதை புதுமையான சாலைகள் வடிவமைப்பு திறன் போட்டியில் பங்கேற்றவர்களில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு விழாவில் திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் கலந்து கொண்டு சான்றிதழ், பரிசுகள் வழங்கினார்.
சீர்மிகு நகரத்திட்டத்தில் “Street 4 People” எனும் நிகழ்ச்சியில் மாநகர பகுதிகளில் பொதுமக்களுக்கான புதுமையான நடைபாதை சாலைகளை வடிவமைத்து தரும் திறன் போட்டியில், இந்திய அளவில் மொத்தம்

113 மாநகரங்கள் மத்திய அரசின் நகர்ப்புற வீட்டு வசதித்துறை அமைச்சகம், புதுடெல்லி மூலம் தேர்வு செய்யப்பட்டதில் திருச்சி மாநகரமும் தேர்வு செய்யப்பட்டது. திருச்சி மாநகராட்சி பகுதிகளில் 1.கரூர் புறவழி இணைப்பு சாலை 2. லாசன்ஸ் மற்றும் Promenade ஆகிய இரண்டு பிரதான சாலைகள் இப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டது. இத்திறன் போட்டியில் நடைபயிற்சி சாலைகளை வடிவமைக்கும் போது, பாதுகாப்பு, உள்ளூர் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரம் போன்றவை அடங்கும்.

இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசுத் தொகை ரூ.1,00,000, இரண்டாம் பரிசுத் தொகை ரூ 75,000 மற்றும் மூன்றாம் பரிசுத் தொகை ரூ.50,000 என அறிவிப்பு செய்யப்பட்டது. இப்போட்டியில் மொத்தம் 34 அணிகள் பங்கு கொண்டதில் வெற்றியாளர்கள் விபரம் பின்வருமாறு;-

1. கரூர் புறவழி இணைப்பு சாலை 
கே.ராகுல் மற்றும் எஸ்.வி.மெகதீபா, பி.கார்த்திகேயன், ஏ.எஸ்.சந்திரமௌலி மற்றும் டி. பாஸ்கர்.

2. லாசன்ஸ் சாலை
டி.முத்துராமன் மற்றும் எம்.கே.சுரேஷ்குமார். ரகுராம் கலியமூர்த்தி மற்றும் டி.ஆர்.ராதாகிருஷ்ணன். என்.செந்தில்குமார் மற்றும் யு.லலித்கிரண் ஆகியோர் ஆவர்.

இதற்கான பரிசளிப்பு விழாவில் துணைமேயர் ஜி.திவ்யா, ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான், நகரப்பொறியாளர் எஸ்.அமுதவல்லி, நிர்வாக பொறியாளர்கள் பி.சிவபாதம், ஜி.குமரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.