திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் எனப்படும் கொரோனா பரிசோதனை செய்த பின்பு அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது 48 மணி நேரம் முன்பாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அரபு நாடுகள் தெரிவித்துள்ளதால் பயணிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

தொடர்ந்து விமான நிலையத்திலேயே பரிசோதனை மேற்கொண்டால் எளிமையாக இருக்கும் என பயணிகள் கோரிக்கை வைத்த நிலையில் முதற்கட்டமாக மீண்டும் சென்னை விமான நிலையத்தில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை முடிவுகள் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இதனை தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் நாளை சனிக்கிழமை முதல் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு சோதனை நடைபெற உள்ளது. இந்த சோதனை மேற்கொள்ளும் பயணிகள் 4 மணி நேரம் முன்னதாக விமான நிலையத்திற்கு வர வேண்டும் என்றும் அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இரண்டு மணி நேரத்தில் முடிவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக ரூ.1,575 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என விமான நிலையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறியhttps://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA