மணிமேகலை விருது பெற அழைப்பு!
மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிப் பகுதிகளிலுள்ள சுய உதவிக் குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் தொகுதி
அளவிலான கூட்டமைப்புகள் ஆகியவைகளுக்கு மணிமேகலை விருது வழங்கிடும் பொருட்டு, மேற்கண்ட சமுதாய அமைப்புகளிடமிருந்து தகுதியான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதி வாய்ந்த விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியரக வளாகத்திலுள்ள மகளிர் திட்ட
அலுவலகத்திலோ (0431 2412726) அல்லது சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிஅலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் வருகிற 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. என திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.