ரூ. 50 கோடி மதிப்பிலான 4.5 ஏக்கர் நிலம் மீட்பு!

0 405
Stalin trichy visit

திருச்சி கிழக்குவட்டம், கொட்டப்பட்டு பெரியகுளத்தில் நீர்நிலைப்புறம் போக்கில் சுப்பிரமணியன் மகன் பாஸ்கரன் என்பவரால் ரூ.50 கோடி மதிப்பிலான 4.5 ஏக்கர் பரப்பில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்ததை வருவாய்த்துறையினர் கண்டறிந்து, மேற்படி ஆக்கிரமிப்பு அகற்ற உரியபடிவம் வழங்கப்பட்டும் ஆக்கிரமிப்புதாரரால் எவ்விதநடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. திருச்சி கிழக்கு வருவாய் வட்டாட்சியர் கலைவாணி தலைமையில் வட்டத்துணை

அளவர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராமநிர்வாக அலுவலர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர் மேற்படி ஆக்கிரமிப்பில் இருந்த ஆஸ்பெஸ்டாஸ் கட்டடத்தில் இருந்தமின் இணைப்பு மின்வாரியத்துறையின் மூலம் காலை 11 மணியளவில்

துண்டிக்கப்பட்டது. மேலும் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றப்பட்டது. திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார் மற்றும் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம் ஆகியோர் மேற்காணும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியினை மேற்பார்வையிட்டனர். இதனால் நீர்நிலைப்புறம் போக்கில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசுநிலம் மீட்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.