திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமதுகனி. இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை கடை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டை ஒரு சிறுவன் உடைத்துக் கொண்டிருந்தான். அவனை கையும் களவுமாக பிடித்து அரியமங்கலம்
காவல் நிலையத்தில் முகமதுகனி ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அவன் கருவாட்டுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. சிறுவனை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.