திருச்சி செந்தண்ணீர்புரம் கோபாலன் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 49). இவர் சங்கிலியாண்டபுரம் பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். அப்பகுதியில் உள்ள கடையை வாடகைக்கு விடுவது தொடர்பாக மற்றொரு தரப்பினர் சுப்பிரமணியிடம் தகராறு செய்து, சலூன் கடையில் இருந்த பெஞ்சை
சேதப்படுத்தியுள்ளனர். அப்போது சுப்பிரமணியையும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுப்பிரமணி அளித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் அப்பகுதியை சேர்ந்த கிளின்டன், தினேஷ்குமார் மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.