கூத்தைப்பார் பேரூராட்சி துணை தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சியில் துணைத் தலைவர் தேர்தல் இன்று நடைபெற இருந்த நிலையில், வாக்கு பதிவிற்கு போதுமான வார்டு கவுன்சிலர்கள் இல்லாததால் தற்காலிகமாக
துணை தலைவருக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாகவும், தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி மீண்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.